’பைக்கர்’: இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் படம்!

நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘பைக்கர்’. 

இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர்.

இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும்  2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில்  படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி,

“நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப் படத்தின் உலகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது.

‘பைக்கர்’ உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், அது இன்னும் சிறப்பு பெற்றதாக தெரிந்தது.

இந்தப் படம் இளைஞர்களுக்கும் பைக் ரேசிங் ஆர்வலர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்திய சினிமாவில் மோட்டார் பைக் ரேசிங்கை மையமாகக் கொண்ட இப்படம் மிகவும் முக்கியமான முயற்சியாக தெரிகிறது.

இந்த விளையாட்டை அதிகமான மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இயக்குநரின் உண்மையான நோக்கம் என்பதை உணர முடிந்தது.

டாக்டர் ராஜசேகர் அவர்களின் நடிப்பு ஒரு கடுமையான ஆனால் பாசமுள்ள தந்தையை நினைவுபடுத்தியது. நாயகன் ஷர்வானந்த் தனது கதாபாத்திரத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து, உண்மையான ரேஸராகவே மாறியிருக்கிறார்” என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான்,

“கதையைக் கேட்டவுடனேயே மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட வேகமும் ஆழமும் கொண்ட கதைகள் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஷர்வானந்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. கதை 1990களில் இருந்து 2000கள் வரை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு நகர்வதால், அதன் சூழல் எனக்கு நெருக்கமாக இருந்தது.

பைக் ரேசிங் உலகின் ஒலி வேறுபாடுகளை உணர்த்துவதில் சவுண்ட் டிசைன் மிக முக்கிய பங்காற்றியது.

இந்தப் படம் இந்திய அளவைக் கடந்து சர்வதேச அளவிலும் ரசிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.”

இயக்குநர் அபிலாஷ்,

“ ‘பைக்கர்’ படம் வெறும் ரேஸ் பற்றிய கதை மட்டும் அல்ல, அதில் ஆழமான மனித உணர்வுகளும் இடம்பெற்றுள்ளன. அதனால்தான் தமிழிலும் வெளியிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு தமிழ் சரியாகப் பேச வராவிட்டாலும், இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ராஜீவன் சார், மதி சார், யுவராஜ் சார், ஜிப்ரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது. எதிர்காலத்தில் தமிழ் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.  

நடிகை மாளவிகா,

சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே கிடைக்கும் அன்பும் வரவேற்பும் எப்போதும் நினைவில் நிற்கும். இன்னும் பல தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

நடிகர் ஷர்வானந்த்,

‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கம் இருந்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் மீதும் தமிழ் மக்களின் மீதும் எனக்கு எப்போதும் தனி அன்பும் மரியாதையும் உண்டு.

அதனால்தான் தமிழில் படம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து வருகிறேன்.

என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம் என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது. ஏனெனில், இது இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம்.

இந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையைக் குறைத்து, 18 வயது இளைஞனாகவும் 30 வயது மனிதராகவும் இரு பரிமாணங்களில் என்னை மாற்றிக் கொண்டேன்.

இந்தப் படம் என்னை நடிகராக மட்டும் அல்ல, மனிதராகவும் மாற்றிய ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது.

ராஜீவன், மதி, யுவராஜ், ஜிப்ரான், ராஜசேகர், மாளவிகா, வம்சி ரெட்டி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்தை சிறப்பாக மாற்றியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக நீண்ட அர்ப்பணிப்புடன் உருவான இந்தப் படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: அபிலாஷ் ரெட்டி
வழங்குபவர்: விக்ரம் ரெட்டி
தயாரிப்பாளர்கள்: வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலபாட்டி
இசை: ஜிப்ரான்
நிறுவனம்: UV Creations
ஒளிப்பதிவு: J. யுவராஜ்
புரடக்ஷன் டிசைனர்: ராஜீவன்
எடிட்டர்: அனில் பசலா
கலை இயக்கம்: A. பன்னீர் செல்வம்
எழுத்தாளர்கள்: M.V.S. பரத்வாஜ், ஷ்ரவன் மாதாலா
ஸ்டண்ட்ஸ்: திலீப் சுப்பராயன்
நடன அமைப்பு: ராஜு சுந்தரம், சேகர் VJ, விஸ்வ ரகு
ஒலி வடிவமைப்பு: சிங் சினிமா
மக்கள் தொடர்பு – யுவராஜ்.

Comments (0)
Add Comment