விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர் ஷிவின் மற்றும் குயின்சி. இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே தோழிகளாகவும், வெளியே வந்த பின்னும் தங்கள் நட்பைத் தொடர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் விமல் நடிக்கும் புதிய படத்தில் ஷிவின் மற்றும் குவின்சி ஆகிய இருவருமே முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவு நாளில் படக்குழுவினர்களுடன் விமல், ஷிவின், குவின்சி ஆகியோர் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
– தேஜேஷ்