அப்பா, அம்மா, மனைவி என யார் பேச்சையும் விஜய் கேட்கவில்லை!

பயில்வான் ரங்கநாதன் ஆதங்கம்

திரைப்பட தயாரிப்பாளர் பிடி செல்வகுமாருடன் எனக்கு 40 ஆண்டு பழக்கம். சினிமாவில் ஒழுக்கமான நபர்களை பார்ப்பது அரிது. எந்த கெட்ட பழக்கத்திற்கும் அடிமையாகாத சிறந்த மனிதர்.

தாய் தன் குழந்தையைப் பாதுகாப்பாக பார்ப்பது போன்று பி.டி.செல்வகுமார் விஜய்யை பாதுகாத்தார்.

ஆனால், இன்றைக்கு அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என யாரின் பேச்சையும் விஜய் கேட்கவில்லை.

இவர் எந்தக் காலத்திலும் தலைவராக மாட்டார். அந்த தகுதி விஜய்க்கு இல்லை. இன்று மனைவி குழந்தைகள் கூட இல்லை.

ஏழைகளுக்கு எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்தவர் எம்.ஜி.ஆர். அதனால் தான் எம்ஜிஆரின் பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது.

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர். ஒரு தலைவனாக இருந்தால் அந்த இடத்தில் துணிச்சலாக நின்றிருப்பார்.

ஆனால், அங்கிருந்து தப்பித்து ஓடியவர் தான் விஜய். அந்த இடத்தில் தம்பி பி.டி.செல்வகுமார் இருந்தாருந்தால் இப்ப்படிப்பட்ட சம்பவமே நடந்திருக்காது. விஜயிடம் நல்ல ஆலோசகர் கிடையாது.

விஜய்க்கு தலைவா, ஆதி, காவலன் படங்களுக்கு பிரச்சினை வந்தபோது அதை சாதுர்யமாக கையாண்டு பிரச்சினைகளை தீர்த்து வைத்ததுடன் அந்தப் படங்களை திரைக்குக் கொண்டு வந்தவர் பி.டி.செல்வகுமார் என்பதை திரையுலகம் அறியும்.

இன்றைக்கு அம்பானி செய்ய வேண்டிய விஷயத்தை பிடி செல்வகுமார் செய்கிறார். அந்த அளவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் பி.டி.செல்வகுமார் உதவிகளை செய்து வருகிறார்.

இந்த மாவட்டத்தில் கல்விக்காக அவர் செய்யும் சேவையால் இந்த மாவட்ட மக்களின் நெஞ்சத்தில் என்றைக்கும் நிற்பார்.

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல்ல பண்பானவர்கள். கோடீஸ்வரனாக இருந்தாலும் அதிகாரம் இருந்தால் தான் மக்களுக்கு நல்ல சேவைகளை தொடர்ந்து செய்ய முடியும்.

பி.டி.செல்வகுமாருக்கு இறைவன் அருளால் நல்ல பதவிகள் தேடி வரும். நடிகர் விஜய்க்காக 9 பத்திரிகைகள் நடத்தியவர் அவர்.

இந்த அளவுக்கு விஜய் உயர காரணமாக இருந்தவர். விஜய்க்கு மனிதர்களை மதிக்கத் தெரியாது.

ஆனால், பி.டி.செல்வகுமார் பிறர் துன்பம் அறிந்து சேவையாற்றி வருகிறார். இவரைப் போன்றவர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும் என்று பேசினார்.

Comments (0)
Add Comment