விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் பாலா!

சின்னத்திரையைத் தாண்டி வெள்ளித்திரையிலும் நகைச்சுவையில் கலக்கிய கே.பி.ஒய் பாலா ‘காந்தி கண்ணாடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார்.

இதற்கிடையில் பேட்மிண்டன் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் ‘ரீமேட்ச்’ என்ற புதிய படத்தில் பாலா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தானு ஹர்ஷா கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தானு ஹர்ஷா பேட்மிண்டன் வீராங்கனையும் கூட.

சந்தோஷ் பிரதாப், இளவரசு, ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், செல்முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அர்வி ஒளிப்பதிவு செய்கிறார். அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.

ஆர்.விமல்குமார் எழுதி இயக்கும் இந்த படத்தை தினேஷ்ராஜ், பிரகாஷ் சேஷாத்ரி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்து வருகிற அக்டோபர் மாதம் படத்தைத் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

Comments (0)
Add Comment