தீபாவளி ரேஸில் இருந்து விலகிய ‘அயலான்’!

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில் பொங்கலுக்கு தள்ளிப்போனது அயலான் திரைப்படம்.

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர். ரவி குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில், மிக பிரமாண்டமாக கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய திரைப்படம் ‘அயலான்’.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் CG & VFX உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் பணிகள் அதிகமானது.

வேற்றுகிரகவாசியுடன் பயணிக்கும் இந்தக் கதை, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.

இந்நிலையில் படத்தின் பணிகள் முழுமையடையாத காரணத்தால் தீபாவளி ரேஸில் இருந்து அயலான் படம் விலகி இருக்கிறது.

மேலும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. மேலும் படத்தின் டீஸர் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது‌.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment