அட்லி படத்தில் நடிக்கும் சல்மான் கான்!

பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ மூலம் இந்திக்குச் சென்ற இயக்குநர் அட்லி, அடுத்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து இயக்க இருந்தார்.

இந்தப் படத்துக்காக அல்லு அர்ஜூன், தனக்கு ரூ.80 கோடி சம்பளம் கேட்டதாகச் செய்திகள் வெளியானது. அதனால் படத்தைத் தயாரிக்க முன் வந்த கீதாஆர்ட்ஸ் நிறுவனம் கைவிட்டு விட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் அட்லி, சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை கேட்ட சல்மான் கான் நடிக்க உடனே சம்மதித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் தென்னிந்திய ஹீரோ ஒருவரும் நடிக்க இருக்கிறார். அவர் தமிழ் நடிகரா, தெலுங்கு ஹீரோவா என்பது தெரியவில்லை. இது பீரியட் படம் என்று கூறப்படுகிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

தற்போது சல்மான் கானை வைத்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ‘சிகாந்தர்’ படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. இந்தப் படத்தை முடித்து விட்டு அடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Comments (0)
Add Comment