மீண்டும் இரட்டை வேடத்தில் அருண் விஜய்!

தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி இடத்தைப் பிடித்துள்ள அருண் விஜய் நடித்து வரும் அடுத்த திரைப்படம் ‘ரெட்ட தல’. கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

‘தடம்’ திரைப்படத்திற்கு பிறகு அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அருண் விஜயின் 36வது திரைப்படமான இதில், நாயகியாக சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் நிலையில் பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளதாக அருண் விஜய் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்தப் பதிவில் ஒரு ஸ்டில் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ரெட்ட தல’ படம் குறித்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். இந்தப் படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment