கணவர்களைவிட அதிக சொத்து வைத்துள்ள நடிகைகள்!

நடிகைகள் சினிமாவைத் தாண்டி விளம்பரப் படங்களில் நடித்தும், தொழில்களில் முதலீடு செய்தும் நிறைய சம்பாதிக்கிறார்கள். சில நடிகைகள் கணவர்களை விட அதிக சொத்து சேர்த்திருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் முன்னணிக் கதாநாயகியாக கொடிகட்டிப் பறக்கும் நயன்தாராவுக்கு ரூ.200 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகவும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு ரூ.50 கோடி என்றும் இணையத்தில் தகவல் பரவி உள்ளது. நயன்தாரா தொழிலதிபராகவும் மாறி இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் கோடீஸ்வர கதாநாயகிகளில் முதல் இடத்தில் இருக்கிறார். இவரது சொத்துக்களின் மதிப்பு ரூ.800 கோடி. ஆனால், அவரது கணவரான அபிஷேக் பச்சனின் சொத்து மதிப்பு ரூ.280 கோடி தான்.

இந்தி நடிகை கத்ரினா கைப் சமீபத்தில் தன்னைவிட 5 வயதுக் குறைந்த நடிகர் விக்கி கவுசலைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

விக்கி கவுசல் சொத்து மதிப்பு ரூ.41 கோடி. ஆனால் கத்ரினா கைப்புக்கு ரூ.224 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த மேரி கிறிஸ்துமஸ் படம் தமிழிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் தீபிகா படுகோனேவுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் சொத்துக்கள் உள்ளன. அவரது கணவரான நடிகர் ரன்வீர் சிங் சொத்து மதிப்பு ரூ.245 கோடி. தீபிகா படுகோனே நடிப்பில் சமீபத்தில் வந்த கல்கி 2898 ஏடி படம் உலக அளவில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது.

இந்தி நடிகை அலியாபட் சொத்து மதிப்பு ரூ.550 கோடி. ஆனால் அவரது கணவரான நடிகர் ரன்வீர் கபூர் மொத்த சொத்து மதிப்பு ரூ.35 கோடி.

நன்றி: தினந்தந்தி.

#நடிகைகள் #Actresses #சொத்துகள் #Assets #நயன்தாரா #Nayanthara #ஐஸ்வர்யா_ராய் #Aishwariya_Rai #கத்ரினா_கைப் #Katrina_Kaif #தீபிகா_படுகோன் #Deepika_Padukone #அலியாபட் #Aliya_butt 

Comments (0)
Add Comment