660 கோடி வசூலைத் தாண்டிய ‘அனிமல்’ படம்!

நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் 660 கோடியே 89 லட்சம் ரூபாய் வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

‘அனிமல்’ திரைப்படம் கடந்த 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளார்.

இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இந்நிலையில், ‘அனிமல்’ திரைப்படம் 660 கோடியே 89 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment