ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் அல்லு அர்ஜுன்!

தொடர்ச்சியாக  தமிழில் நான்கு  வெற்றிப் படங்களைக் கொடுத்த நம்ம ஊர் டைரக்டர் அட்லீ, இந்தி சினிமாவாலும் வெற்றிக் கொடி நாட்டினார்.

ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ‘ஜவான்’ வசூல் மழை பொழிந்தது. அட்லீ, இப்போது நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து, தெலுங்கு படம் இயக்கி வருகிறார்.

இது, சயின்ஸ் பிக்ஷன் படம். இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இதையடுத்து அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இது புராணப்படம். படத்தின் பட்ஜெட் ஆயிரம் கோடி ரூபாய்.

அல்லு அர்ஜுன் – திரிவிக்ரம் கூட்டணி இதற்கு முன் 4 படங்களில் இணைந்துள்ளது. இவர்களின் ‘அலா வைகுந்தபுரமுலூ’ தென்னிந்தியா முழுவதும் நல்ல வசூலைக் கொட்டியது.

அட்லீ படத்தின் ஷுட்டிங் முடிந்ததும், இந்த புதிய படத்தின்படப்பிடிப்பு தொடங்குகிறது.  2027 ஆம் ஆண்டு படத்தை வெளியிட திட்டம்.

இது, தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றிய படம். ஆரம்பத்தில் இதன் ஹீரோவாக ஜூனியர் என்.டி.ஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

படத்தின் நாயகி மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த  அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment