ரசிகர்கள் செயலால் எரிச்சலடைந்த அஜித்!

கிட்டத்தட்ட ஓராண்டாக, சர்வதேச கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார் அஜித். அண்மையில் மலேஷியாவில் நடந்த ரேசில் கலந்து கொண்ட அவர், இப்போது துபாயில் நடக்கும் சர்வதேச  கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார்.

அவரைப் பார்க்கவும் கார் ரேஸில் அவர் பங்கேற்பதைக் காணவும் ஏராளமான ரசிகர்கள் துபாய் ஸ்டேடியத்துக்கு சென்று வருகிறார்கள்.

அஜித்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். சில ரசிகர்கள் அத்துமீறி நடந்துகொள்ளும் செயலும் அவ்வப்போது நடக்கிறது.

அதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

அஜித், கார் பந்தய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அஜித்தை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பரித்தனர்.

‘தல.. தல’ என ஒரு கூட்டம் கத்த, இன்னும் சிலர் மேலும் ஒருபடி மேல் சென்று, ‘கடவுளே..,,கடவுளே’ என ஆர்ப்பரித்தனர்.

ரசிகர்களின் இந்தச் செயல் ஸ்டேடியத்தின் அமைதியான சூழலை சீர் குலைத்தது.

அங்கிருந்த பலரும் முகம் சுழித்தனர். இதனால் அஜித் எரிச்சல் அடைந்தார். “இது ஒண்ணும் சினிமா தியேட்டர் கிடையாது. ஒழுங்கா நடந்துகொள்ளுங்க” என எச்சரிக்கும் தொணியில் சொன்னார்.

இதைக் கேட்டு ரசிகர்கள் கப்சிப் ஆகினர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment