வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘கோட்’ படத்தில் விஜய் அவருடைய போர்ஷன் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
அடுத்து விஜய் தனது 69-வது படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். இந்தப் படத்தை எச். வினோத் இயக்குகிறார். இது விஜய் நடிக்கும் கடைசிப் படம் என்பதால் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய்யுடன் நடிக்க மலையாள நடிகை மமிதா பைஜுவுடன் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் பரவி உள்ளது.
மமிதா பைஜு சமீபக் காலத்தில் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறி இருக்கிறார்.
இவர் மலையாளத்தில் நடித்த ‘பிரேமலு’ படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டு நல்ல வசூல் பார்த்தனர். ஜி.வி.பிரகாஷூடன் ‘ரெபல்’ படத்திலும் நடித்து இருந்தார். தற்போது பிரதீப் ரங்கநாதன், அதர்வா படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்யின் 69-வது படத்தில் மமிதா பைஜுவை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு ஜோடியாக நடிப்பாரா? அல்லது வேறு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்பது தெரியவில்லை.