வெளியீட்டுக்குத் தயாரான விஜய் சேதுபதியின் 50-வது படம்!

இந்தியாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தனது 50வது படமான ‘மகாராஜா’ ரிலீஸுக்கு தயாராகி வருகிறார்.

‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய  இந்தப் திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் டிரெய்லரை தயாரிப்பாளர்கள் சமீபத்தில் வெளியிட்டனர். ஒன்றரை நிமிட வீடியோ வெளியாகி படத்தை பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

படத்தில் சலூன் உரிமையாளராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதில், ‘லட்சுமி’ என்பது தங்கம், ஆவணங்கள், சொத்துக்கள் அல்லது நபர் அல்ல என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.

‘லக்ஷ்மி’யின் பின்னணியில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க போலீசார் போராடும்போது ஒரு அதிரடி த்ரில்லரின் காட்சிகளை டிரெய்லர் விளக்குகிறது.

‘மகாராஜா’ ஒரு தீவிரமான க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்பது தெளிவாகிறது. எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள மகாராஜா படம் இந்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ், பாரதிராஜா, முனிஷ்காந்த், அபிராமி, பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும், தினேஷ் புருஷோத்தமனின் காட்சியமைப்பும், பிலோமின் ராஜின் எடிட்டிங் அருமை.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment