சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள `கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
அதேபோல் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் `சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான `சூரரைப்போற்று’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தில் சூர்யா கேரக்டரில் அக்ஷய்குமார் நடித்திருக்கும் நிலையில், சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு `சர்ஃபிரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு போஸ்டரும் வெளியாகியுள்ளது. `சர்ஃபிரா’ படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளதாக வெளியான போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
– தேஜேஷ்.