துல்கர் சல்மான் படத்தில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் தற்போது ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அப்படியே, இங்கு, தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்தவர் எஸ்.ஜே.சூர்யா தற்போது வில்லனாக நடித்து வருகிறார். இவர் ‘மெர்சல்’ படத்தின் மூலம் முதன் முதலாக வில்லனாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து ‘ஜிகர்தண்டா-2’, ‘மார்க் ஆண்டனி’, ‘சூர்யாவின் சனிக்கிழமை’ போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து மலையாளத்தில் பகத் பாசில் உடன் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. 

இந்நிலையில் நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment