ஷீரடியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்!

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மகளுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

ஷாருக்கான் நடித்துள்ள “டன்கி” திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு தனது மகள் சுஹானா கானுடன் சென்ற ஷாருக்கான் ‘டன்கி’ திரைப்படம் வெற்றி பெறவேண்டி பிரார்த்தனை செய்தார்.

முன்னதாக, ஷாருக்கானுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment