சதிஷ்குமார் தயாரிப்பில் JSB பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில், ‘மெர்லின்’, ‘அசுரகுரு’, ‘சிங்கப்பெண்ணே’, ‘ஜிஎஸ்டி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் அந்த நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தை தனுஷ் கதாநாயகனாக நடித்த விஐபி, தங்கமகன் பட இயக்குநர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.