மனதை விட்டு நீங்காத மயில்சாமி!

தாவணிக் கனவுகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் மயில்சாமி. மிமிக்ரி கலைஞரான இவர், மேடை நாடகக் கலைஞராக இருந்து தனது திறமையால் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

தனது நகைச்சுவையின் மூலம் முற்போக்கு சிந்தனைகளை விதைத்தவர் மயில்சாமி.

மறைந்தாலும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத மயில்சாமியின் பிரபல காமெடி சீன்கள்

தூள்

இந்தப் படத்தில் விவேக்கை ஏமாற்றி பணத்தை பறித்து திருப்பதிக்கு சென்று வருவதாக கூறுவார் மயில்சாமி. அதைவிட அந்த ஜிலேபி மேட்டர் தான் அல்ட்டிமேட்.

திருப்பதி சென்று திரும்பியதாக வரும் மயில்சாமியிடம் பார்சலில் லட்டுவிற்கு பதிலாக ஜிலேபி இருக்க, அதை விவேக்கிடம் சமாளிப்பதற்காக “திருப்பதியில இப்ப லட்டுக்கு பதிலா ஜிலேபி தான் கொடுக்குறாங்கணு” என சொல்லி இருப்பார்.

தவசி

தவசி திரைப்படத்தில் மயில்சாமி ஒரே காட்சியில் வந்தாலும் அந்த சீனில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சிரிக்க வைத்திருப்பார்.

போலி மாந்திரீக வாதியாக வந்து வடிவேலுவிற்கு விபூதி அடித்து பணத்தை சுருட்டும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் மீம்களாக உலா வருகிறது.

பாய்ஸ்

பாய்ஸ் திரைப்படத்தில் பார் சீனில் சீனில் நடித்து மயில்சாமி ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தி இருப்பார்.

ஹீரோ மற்றும் அவரது நண்பர்களிடம், I am வேணுகோபால், from டைட்டில் பார்க் என்று மது வாங்கிக் குடித்திருப்பார்.

உன்னை நினைத்து

உன்னை நினைத்து திரைப்படத்தில், திருமணமாக உள்ள இளைஞராக நடித்திருப்பார் மயில்சாமி.

அதில் தான் அழகாக வேண்டும் என்பதற்காக தங்க பஸ்பம் லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு, கருப்பாக மாறி அவர் பேசிய வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கும்.

உத்தமபுத்திரன்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படத்தில் மயில்சாமி சில சீன்களில் மட்டுமே நடித்து இருப்பார்.

ஜெனிலியா ரூட் கேட்க, அவர் நடிகைக்கு ரூட் போட்டு கொண்டு இருப்பார். அவர் அந்த படத்தில் நகைச்சுவையாக பேசிய வசனம் வரவேற்பை பெற்றது.

– பிரியதர்ஷினி 

  • நன்றி – நியூஸ் சென்ஸ் இதழ்
Comments (0)
Add Comment