நடிகர் கார்த்தி இயக்குனர் ராஜு முருகன் கூட்டணியில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் ராஜு முருகன் கைகோர்த்துள்ளார்.
இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
‘ஜப்பான்’ திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25-வது படம் என்பதால் மிக அதிக பொருட்செலவில் தயாராகி வருகிறது. அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முந்தைய 24 படங்களைக் காட்டிலும் முதல்முறையாக கார்த்தியின் 25-வது படத்துக்கு பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
அக்டோபர் 28-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜப்பான் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் முந்தைய 24 படங்களின் இயக்குநர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜப்பான் படத்தின் டீசர் தற்போது வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
– தேஜேஷ்