இரட்டையர்கள் இயக்கும் கமலின் 237-வது படம்!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகராக திகழுபவர் உலக நாயகன் கமல்ஹாசன்.

இவரின் நடிப்பில் சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன்-2 திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்த நிலையில் இந்தியன்-3 படத்தைக் குறித்த தகவல்கள் வைரலாகி வந்தன.

இதற்கிடையில், மணிரத்னம் இயக்கத்தில் ஏராளமான நட்சத்திரங்களுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல்.

இதையடுத்து, இவருடைய 235-வது படத்தை பா.ரஞ்சித் இயக்குவதாகவும் மற்றும் 236-வது படம் நெல்சன் திலிப்குமார் இயக்குவதாகவும் கூறப்பட்ட நிலையில், இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் கமலின் 237-வது படம் ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் பிரபலமான நடன இரட்டையர்களான அன்புமணி, அறிவுமணி சகோதர்கள் இருவரும் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் இப்படத்தின் பற்றிய தகவல் அதிகாரபூர்வமாக அறிவிப்பை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில் இப்படம் முழுக்க ஆக்ஷன் நிறைந்த படமாகவும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment