மீண்டும் ஆபரேஷன்: ஓராண்டுக்கு அஜித் ஓய்வு!

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அதன் பிறகு ஓராண்டு ஓய்வில் இருந்த அஜித், மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

படத்தைத் தயாரிக்கும் ‘லைகா’ நிறுவனத்துக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டதால், அதன் படப்பிடிப்பு கொஞ்ச நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் ‘குட் பேட் அக்லி’ எனும் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் அஜித், கடந்த மார்ச் மாதம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

அவருடைய மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது.

இப்போது அஜித் கைவசம் இரண்டு திரைப்படங்கள் உள்ளன. ‘விடாமுயற்சி’ கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்தையும் முடித்துவிட்டு, மீண்டும் ஒரு ஆபரேஷனுக்கு தயார் ஆகிறார், அஜித்.

இதற்கு முன்னதாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குணமடைய வேண்டும் என்றால் இந்த அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.

எனவே ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, இந்த அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சை செய்தபின் ஒரு வருடம் ஓய்வு எடுக்கப்போகிறாராம் அஜித். அதனால் அவர் இன்னும் ஒரு ஆண்டு படங்களில் நடிக்கமாட்டார்.

இந்தத் தகவலை மூத்தப் பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.

‘தல’ ரசிகர்களுக்கு கவலை தான்.

சுவர் இருந்தா தானே சித்திரம் வரைய முடியும். பொறுத்துங்கோங்க… !

-பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment