’96’ இரண்டாம் பாகத்தில் திரிஷா?

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் முதல், கலகலப்பு உள்ளிட்ட படங்கள் வரை இரண்டாம் பாகங்கள் வந்து பரவலான வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

இந்த நிலையில், 2018-ம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் வெளிவந்த ’96’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இளம் வயதில் பள்ளியில் காதலித்த பெண் இன்னொருவருக்கு மனைவியாகி வெளிநாடு சென்ற நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தன் காதலியை சந்திக்கும் காதலனின் மனநிலையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருந்தது. ரசிகர்களின் மனங்களையும் இந்தப் படம் அபாரமாக ஈர்த்தது.

தற்போது இப்படத்தின் இயக்குநர் பிரேம்குமார் 96 இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

96 இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதிய பிறகு அது மிகவும் பிடித்து இருந்தது என்றும் இதையடுத்து இரண்டாம் பாகத்தை எடுக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்றும் விஜய்சேதுபதி, திரிஷா கால்ஷீட் ஒதுக்குவதை வைத்து படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார் இயக்குநர் பிரேம்குமார்.

96 இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் அதே அளவுக்குக் கொண்டாடுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments (0)
Add Comment