Take a fresh look at your lifestyle.

‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்தது பெரிய தவறு!

நடிகை அமலா பால் வருத்தம்

52

மலையாள நடிகை அமலா பால், தமிழில் பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். படம் நல்ல வெற்றியை பெற்றது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அமலா பால்.

தொடர்ந்து, மைனா, காதலில் சொதப்புவது எப்படி வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, குட்டி ஸ்டோரி, ஆடை, பசங்க2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த அவர், இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்தார்.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டுப் பிரிந்தார். ஜகத் தேசாய் என்பவரைக் காதலித்து 2வது திருமணம் செய்துள்ள அமலா பாலுக்கு, ஒரு மகன் இருக்கிறான்.

இந்த நிலையில், சாமி இயக்கிய ‘சிந்து சமவெளி’ என்ற படத்தில் நடித்தது குறித்து அமலா பால் வேதனையுடன் சொன்ன கருத்து இது:

‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்து, மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். அந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு 17 வயது.

இனி ஒருபோதும் அந்த மாதிரி கேரக்டரில் நடிக்கவே மாட்டேன். அப்படத்தில் நடித்து முடித்த பிறகு நான் மிகவும் பயந்தேன்.

பயந்த மாதிரியே நடந்து விட்டது. அந்தப் படத்தில் நான் நடித்த வேடத்துக்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து எதிர்மறை கருத்துகள் வந்தன. நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன்.

அப்படத்தைப் பார்த்த என் தந்தை சோகமாக இருந்தார். அப்படம் என் தனிப்பட்ட வாழ்க்கையை பாதித்தது” என்று கண்ணீர் மல்க கூறினார் அமலா.

அமலா பால் வருத்தப்படும் அளவுக்கு ‘சிந்து சமவெளி’யில் என்ன பிர்ச்சினை?

‘உயிர்’ உள்ளிட்ட படங்களில் தகாத உறவை சொல்லி இருப்பார், சர்ச்சை இயக்குநர் சாமி. இந்தப் படமும் அந்த ரகம்தான்.

– பாப்பாங்குளம் பாரதி.