Take a fresh look at your lifestyle.

அக்டோபரில் வெளியாகும் ‘வெனோம் – தி லாஸ்ட் டான்ஸ்’!

76

கெல்லி மார்செல் இயக்கத்தில் டாம் ஹார்டி நடிப்பில், வெனோம் தி லாஸ்ட் டான்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில், சிவெடெல் எஜியோஃபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இஃபான்ஸ், பெக்கிலு, அலன்னா உபாச், ஸ்டீபன் கிரஹாம் பலர் நடித்துள்ளனர்.

மார்வெல் டிரையாலஜியின் இறுதித் தொகுப்பான இந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியாவில் அக்டோபர் 25-ம் தேதி 3டி-யில் வெளியிடுகிறது. இந்தப் படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் இறுதி டிரெய்லரிலிருந்து முக்கியமாக கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்.

வெனோமிஷ்ட் மீன் (Venomised Fish):

முதல் டிரெய்லர் வெனோமிஷ்ட் குதிரை இருந்தது நியாபகம் இருக்கலாம். இந்தக் கதாபாத்திரம் பெற்ற வரவேற்பை அடுத்து, இன்னும் அதிக விஷத்தன்மை கொண்ட விலங்குகளை அடுத்த பாகத்தில் பார்க்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

டிரெய்லரில் நீங்கள் உற்று கவனித்துப் பார்த்தால் ஒரு ஷாட்டில் பின்தொடர்பவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்தபோது வெனோம் மீனை கைப்பற்றியிருப்பதைக் காணலாம்.

சிம்பயோட்ஸ் (Symbiotes on the run):

’வெனோம் டிரெய்லர்: தி லாஸ்ட் டான்ஸ்’ஸில் ஒரு முக்கியக் காரணத்திற்காக சிம்பியோட்கள் பூமியில் இருப்பதை நிறுவுகிறது. காமிக்ஸைப் போலவே அவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எல்ட்ரிட்ச் சிம்பியோட் கடவுளிடமிருந்து சிம்பயோட்டுகள் தப்பி ஓடி பூமியில் தஞ்சம் புகுந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

ஜெனோபேஜ்களின் செயல்பாடு:

முதல் ட்ரெய்லர் ஜெனோபேஜ்களைப் பற்றிய கிளிம்ப்ஸ் கொடுத்திருந்தாலும், இரண்டாவது டிரெய்லர் ஜெனோபேஜ்கள் பறிய அச்சுறுத்தும்படியான முழுமையான காட்சிகளைக் கொடுத்துள்ளது.

ஜெனோபேஜ்கள் வேட்டையாடும் சிம்பயோட்டுகளுக்கு பெயர் பெற்றவை. இந்த விஷயத்தில், வெனோம் அவர்களின் சமீபத்திய இரையாகத் தெரிகிறது.

ஃப்ளாஷ் ஆஃப் வெனோம்ஸ் ஹோம் வேர்ல்ட் (Flashes of Venoms Home World):

வெனோம் ஃப்ரான்சைசில் முதன்முறையாக, வெனோமின் சொந்த உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை இதில் பார்க்க முடிகிறது. வெனோம் மற்றும் பிற சிம்பியோட்டுகள் எங்கிருந்து உருவாகின்றன என்பதை இந்த டிரெய்லர் காட்டுகிறது. அங்கு இப்போது சிம்பியோட்களை உருவாக்கியவருடன் ஜெனோபேஜ்கள் வசிக்கின்றன.

குன்லின் வெளிப்பாடு: (The reveal of Knull)

சிம்பியோட்களை உருவாக்கியவரும், இருளின் கடவுளுமான எல்ட்ரிச்சை இதில் பார்க்க முடிகிறது. காமிக்ஸில் அவர் தடுக்க முடியாத சக்தியாக இருந்தார். அவரது சக்தி பிரபஞ்சத்தை கைப்பற்றுவதாக அச்சுறுத்தியது. ஆனால், இறுதியில் அவர் உருவாக்கிய சிம்பியோட்களால் சிக்குவதாக காட்டப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப் படத்தை காண, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.