அழகான காஷ்மீராக இருந்தாலும் அந்த காலங்களில் அங்கு போய் படம் எடுப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.
ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1961-ல் வெளிவந்த ‘தேன் நிலவு’ திரைப்படம் முழுக்க முழுக்க காஷ்மீரிலேயே எடுக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீதர் தயாரிப்பு நிறுவனமான சித்ராலயா தயாரிப்பில் வந்த முதல் படம். அதுபோல காஷ்மீரில் எடுக்கப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படமும் இது தான்.
காஷ்மீரின் அழகை ஒளிப்பதிவாளர் வின்சென்ட் அழகாகக் கையாண்டு இருந்தார். முழுவதும் காஷ்மீரில் எடுக்கப்படாமல் கொஞ்சம் கொடைக்கானலிலும் இப்படம் எடுக்கப்பட்டு காஷ்மீராக காண்பிக்கப்பட்டது.
அந்த காலங்களில் பிலிமில் எடுக்கப்படும் படங்களுக்கு காஷ்மீர் போன்ற இடங்களில் சினிமா லேப் இல்லாததால், சித்ராலயா நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் அதை எடுத்துக்கொண்டு காஷ்மீரில் இருந்து டெல்லி வந்து,
டெல்லியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் சென்று, அங்கு பிலிமை டெவலப் செய்து கொண்டு, திரும்ப காஷ்மீர் சென்று காஷ்மீரில் உள்ள ஒரு மலைக் கிராமத்தில் உள்ள ஒரு சின்ன தியேட்டரில் இரவு நேரத்தில் அதை preview பார்த்து எடிட் செய்து கரெக்ட் செய்வார்களாம் படக் குழுவினர்.
இவ்வாறு கஷ்டப்பட்டு எடுத்த திரைப்படம் நல்ல வெற்றி பெற்றது. ஏ.எம்.ராஜா இசையில் பாட்டு பாடவா, ஓஹோ எந்தன் பேபி, என எல்லா பாடல்களும் ஹிட்.
ஜெமினி கணேசன் – வைஜயந்தி மாலா ஜோடி இந்தப் படத்தில் நல்ல கெமிஸ்ட்ரி உள்ள ஜோடியாக பேசப்பட்டது. ஸ்ரீதரின் அருமையான இயக்கம் இந்தத் திரைப்படம்.
நிலவும் மலரும் என்ற பாடல் படமாக்கப்பட்டபோது வைஜெயந்திமாலா காஷ்மீரில் உள்ள ஏரியில் மூழ்கி விட்டாராம், கேமரா மேனால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
இப்படி இந்த படம் பற்றி சொல்வதற்கு நிறைய உண்டு.
– நன்றி: முகநூல் பதிவு