Take a fresh look at your lifestyle.

மக்கள் திலகத்தின் மறக்க முடியாத புதன்கிழமை!

எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி சேர்ந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ படத்தில் யார் கதாநாயகன் என்ற சந்தேகம் எம்.ஜி.ஆர். ரசிகர் ஒருவருக்கும். சிவாஜி ரசிகர் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக இருவருக்கும் கடும் வாக்குவாதம் கூட நடந்ததாம். இது பற்றி விளக்கம் கேட்டு அந்த இரு ரசிகர்களும் ஒரே கடிதத்தில் கையெழுத்திட்டு எம்.ஜி.ஆருக்கு எழுதி இருந்தார்கள்.

அவருக்கு வாத்தியார் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“முதலில் நீங்கள் இருவரும் சேர்ந்து கேள்வி கேட்டதற்காக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வளவு ஒற்றுமையாகக் கேள்வி கேட்கும் அன்புள்ளத்தைப் பெற்றிருக்கும் நீங்கள், இந்த சாதாரண அற்பப் பிரச்சனையை தூக்கி எறிந்துவிட்டு, கலைஞர்களை வாழ வைப்பதிலும், கலையை வளர்ப்பதிலும், கலைஞர்களாகிய நாங்கள் நாட்டுக்கு என்ன நல்லது செய்யலாம் என்பது பற்றியும் இப்படியே இணைந்து யோசனை சொல்லக் கூடாதா?”

******

மற்றொரு வாசகர் கேட்ட கேள்விக்கு எம்.ஜி.ஆரின் பதில்:

கேள்வி: உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்று எதைச் சொல்வீர்கள்?

எம்.ஜி.ஆர் பதில்: எத்தனையோ இருக்கிறது. அதில் குறிப்பாக புதன் கிழமையைச் சொல்லலாம். காரணம், என் முதல் மனைவியை நான் திருமணம் செய்து கொண்டது புதன் கிழமை.

சென்னையில் இருந்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்தது புதன் கிழமை. என்னையும் இந்த உலகத்தையும்விட்டு அவர் பிரிந்து சென்றது ஒரு புதன் கிழமை.

நன்றி: நடிகன் குரல், 1954 – நவம்பர் இதழ்.