Take a fresh look at your lifestyle.

மீண்டும் திருமண வாழ்வில் இணையும் சமந்தா?

காதல் கணவர் நாக சைதன்யாவை, சமந்தா பிரிந்த பிறகு, சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சுதந்தரப் பறவையாகச் சுற்றி வருகிறார்.

இந்தியில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப்சீரிஸில் அவர் நடித்தார். அப்போது அந்த வெப்சீரிஸ் இயக்குநரான ராஜ் நிடிமொரு உடன் சமந்தாவுக்கு நட்பு ஏற்பட்டது.

இதையடுத்து ராஜ் இயக்கிய ‘சிட்டாடல்’ வெப்சீரிஸிலும் சமந்தா நடித்தார். அப்போது அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது.

இதை அவர்கள் மீடியாவிடம் வெளிப்படுத்தவில்லை. அதே சமயம் மறுக்கவும் இல்லை.

இந்நிலையில் நேற்று விமானம் மூலம் ஐதராபாத்துக்கு வந்த சமந்தாவின் பக்கத்து சீட்டில் ராஜ் அமர்ந்திருந்தார். அப்போது ராஜ் மீது சாய்ந்தபடி நெருக்கமாக போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்துள்ளார் சமந்தா.

இந்தப் போட்டோவை வலைத்தளங்களில் சமந்தாவே வெளியிட்டிருக்கலாம் என்கிறார்கள்.

இதன்மூலம் இரு ஜோடிகளின் காதல் உறுதியாகி விட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சுற்றி வரும் இளங்காதலர்கள் (?) எப்போது  கல்யாணம் செய்து கொள்வார்கள் என்பது தெரியவில்லை.

சமந்தாவின் காதலர், ராஜ் நிடிமொரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்தான். அவர் தனது மனைவியை விரைவில் விவாகரத்து செய்து விட்டு, சமந்தாவை திருமணம் செய்ய உள்ளதாக பாலிவுட்டில் பேச்சு உலவுகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.