இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பல்வேறு பொறுப்புகளைக் கொண்டவர் சித்ரா லட்சுமணன். புதிதாக ஒரு பொறுப்பாக டூரிங் டாக்கீஸ் என்ற யூ டியூப் சேனலில் தானே பேட்டி எடுப்பவராக மாறி அந்த சேனலை பெரிய அளவில் டெவலப் செய்து விட்டவர் சித்ரா லட்சுமணன்.
2-கே கிட்ஸ்க்கு அவ்வளவு பரிச்சயமில்லாமல் இருந்த இவர், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வரும் காமெடி காம்பினேஷனை வைத்து இவரை பற்றித் தெரிந்துகொண்டனர்.
ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் காமெடி வேடத்திலும், தான் தயாரித்த ஜல்லிக்கட்டு படத்தில் 3 வில்லன்களில் ஒருவராகவும் நடித்தவர் இவர். அந்த வேடத்தில் நடிக்க வேண்டிய முக்கிய வில்லன் சரியாக நடிக்காததால், “நீங்களே நடிங்களேன்…” என மணிவண்ணன் சித்ரா லட்சுமணனையே அவ்வேடத்தில் நடிக்க வைத்தார்.
மண்வாசனை, அம்பிகை நேரில் வந்தாள், வாழ்க்கை, புதிய தீர்ப்பு, ஜல்லிக்கட்டு, சின்னப்ப தாஸ், சூரசம்ஹாரம், பெரிய தம்பி, சின்ன ராஜா போன்ற படங்களை இவரது சகோதரர் சித்ரா ராமுவுடன் சேர்ந்து தயாரித்துள்ளார். இதில் சூரசம்ஹாரம், பெரிய தம்பி, சின்ன ராஜா படங்களை இவர் இயக்கவும் செய்துள்ளார்.
சின்னப்பதாஸ் படத்தில் ஆடியோ ரைட்ஸில் வழக்கமான அப்போதைய நிறுவனத்துக்கு கொடுக்காமல் வேறு நிறுவனத்துக்கு ரைட்ஸ் கொடுத்ததால் அந்தப் பிரச்சினையில் இருந்து இவர்களின் நிறுவனத்துக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. இவர்களும் ராஜாவைத் தேடி போகவும் இல்லை.
நன்றி: முகநூல் பதிவு.
#இயக்குநர் #Director #தயாரிப்பாளர் #Producer #டூரிங்_டாக்கீஸ் #Touring_talkies #யூ_டியூப்_சேனல் #Youtube_channel #சித்ரா_லட்சுமணன் #Cithra_Lakshmanan #ஜப்பானில்_கல்யாண_ராமன் #Japanil_kalyana_raman #ஜல்லிக்கட்டு #jallikattu #மணிவண்ணன் #Manivannan #சூரசம்ஹாரம் #Soorasamharam #பெரிய_தம்பி #Periya_thambi #சின்ன_ராஜா #Chinna_raja #மண்வாசனை #Manvaasanai #அம்பிகை_நேரில்_வந்தாள் #Ambikai_neril_vaanthal