தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘ஜீன்ஸ்’, ‘முதல்வன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் அடுத்த படம் வேள்பாரி நாவலை மையமாகக் கொண்டு சரித்திர படத்தை உருவாக்க உள்ளார்.
இதற்கான திரைக்கதையை ஷங்கர் எழுதி முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஷங்கர் தனது இணையதள பதிவில் வெளியிட்ட தகவலில், வேள்பாரி நாவலின் காப்புரிமையைப் பெற்று இருப்பதாகவும், நாவலில் வரும் சம்பவங்கள் வெவ்வேறு படங்களில் காட்சிகளாக அமைக்கப்படுவது குறித்து மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்றும், நாவலிலிருந்து காட்சிகளை எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் வேள்பாரி நாவல் படத்தில் விக்ரம், சூர்யா ஆகியோரை நடிக்க வைக்க ஷங்கர் முயற்சி செய்வதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 2003-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘பிதாமகன்’ திரைப்படத்தில் விக்ரம் – சூர்யா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து மீண்டும் விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் சரித்திர படம் உருவாகிறது என ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் விக்ரம் பாண்டிய மன்னனாகவும், சூர்யா வேள்பாரி மன்னனாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.
இதில் நடிக்கும் இதர நடிகர் – நடிகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது.