பேசும் படம்:
1975-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மற்றும் லதா நடிப்பில் வெளிவந்த ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் எம்.என்.நம்பியார், பண்டரி பாய், தேங்காய் சீனிவாசன், ஆர்.எஸ். மனோகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்திலுள்ள பாடலுக்காக ரேகார்டிங் ஸ்டூடியோவில் “போய் வா நதி அலையே, இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா” என்ற பாடல் பதிவின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இவை.
புகைப்படத்தில் உள்ளவர்கள் ஜேசுதாஸ் மற்றும் டி.கே.கலா.