Take a fresh look at your lifestyle.

வெளியானது ‘நீல நிறச் சூரியன்’பட டீசர்!

23

தமிழ் திரையுலகில் முதல் திருநங்கை இயக்குநரான சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம் நீல நிறச் சூரியன்.

பர்ஸ்ட் காப்பி புரொட்க்ஷன் சார்பில் மணியன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இதில் கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஸ்டீவ் பெஞ்சமின் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தைப் பற்றி அண்மையில் இயக்குநர் சம்யுக்தா விஜயன் பேசியுள்ளார். அதில், ஓர் ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமல்லாமல் அவர்களை இந்தச் சமூகம் எப்படி பார்க்கிறது அவை எல்லாம் எப்படி கடந்து வருகிறார்கள் என்பது தான் இந்தப் படம். இந்தப் படத்திற்கு எந்தவித நாடகத்தன்மையும் இல்லாமல் கொடுக்க விரும்பினேன்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளும் பெற்றுள்ளது என இயக்குநர் சம்யுக்தா விஜயன் தெரிவித்துள்ளார்.

#நீல_நிறச்_சூரியன் #Neela_Nira_Sooriyan ##திருநங்கை_இயக்குநர்_சம்யுக்தா_விஜயன் #Transgendar_director_Samyuktha_vijayan #ஃபர்ஸ்ட்_காப்பி_புரொட்க்ஷன் #First_copy_production #மணியன்# Maniyan #கீதா_கைலாசம் #Geetha_Kailasam #கஜராஜ் #Gajaraj #மஷாந்த் #Mashanth #ஸ்டீவ்_பெஞ்சமின் #Steevbenjamin