தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்து வரும் நயன்தாரா தற்போது ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
படத்தில் அவரது ரோலுக்கு முக்கியத்துவம் அதிகம் இருப்பது ட்ரைலர் பார்க்கும்போதே தெரிந்தாலும், அவர் எந்த விதமான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாதது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இந்த படத்திற்காக நயன்தாரா சம்பளமாக 11 கோடி ருபாய் வாங்கி இருக்கிறாராம்.
தென்னிந்திய சினிமாவில் நடிக்கும்போது கிடைக்கும் சம்பளத்தை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.