Take a fresh look at your lifestyle.

மோகன்லால் வீட்டில் நீங்களும் தூங்கலாம்!

உச்ச நட்சத்திரங்கள் ‘ரியல் எஸ்டேட்’ டில் முதலீடு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சொந்த ஊர் மற்றும் வெளிமாநிலங்களில்  நிலங்களும், வீடுகளும் வாங்கி குவித்து வருகிறார்கள். பல நடிகர்களுக்கு குளு குளு ஊட்டியில் ‘ஹெஸ்ட் ஹவுஸ்’கள் உள்ளன. அவர்களில் ஒருவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். அவருக்கு கேரளாவில் மட்டுமின்றி சென்னை, ஊட்டி உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் இருக்கின்றன.

இதில் ஊட்டி ஹெஸ்ட் ஹவுசை அவர் வாடகைக்கு விட முடிவு செய்துள்ளார். அந்த வீட்டின் பெயர்- Hideaway. இந்த வீட்டில் மூன்று அறைகள் உள்ளன. இது தவிர ஜிம், நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளும் உண்டு. ரம்மியமான ஓவிய கேலரி விளையாட்டு அரங்கும் இருக்கிறது. இந்த வீட்டைத்தான் வாடகைக்கு விட மோகன்லால் தீர்மானித்துள்ளார். ஒரு நாள் வாடகை ரூ.37ஆயிரம்.

இந்த வீட்டில் சமையல்காரர் ஒருவர் நிரந்தரமாக தங்கியுள்ளார். இங்கு வாடகைக்கு வருவோருக்கு அவரே சமையல் செய்து கொடுப்பார். அந்த வீட்டில் தங்கும் டூரிஸ்ட்கள், அவருக்கு தனியாக சம்பளம் கொடுக்க வேண்டாம். ஆனால், சமைக்க தேவைப்படும் காய்கறிகள், மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்ட ரகங்களை டூரிஸ்ட்களே வாங்கி கொடுத்து விட வேண்டும். இந்த வீட்டில் தங்குவதற்கான புக்கிங் விரைவில் தொடங்க உள்ளது.

வீடு வாடகைக்கு விடும் விஷயத்தில் மோகன்லாலுக்கு இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா? சக போட்டியாளர் மம்முட்டிதான். அவருக்கு கொச்சியில் ஒரு ஹெஸ்ட் ஹவுஸ் உள்ளது. அதனை மம்முட்டி வாடகைக்கு விட்டு காசு பார்த்து வருகிறார். அவர் வழியில் மோகன்லாலும், செல்கிறார்.

– பாப்பாங்குளம் பாரதி,

#mohanlalsootyhomeforrent #மோகன்லால் #மம்முட்டி #ஹெஸ்ட்ஹவுஸ் #மோகன்லால்வீடுவாடகைக்கு #டூரிஸ்ட் #ஊட்டி #mohanlalsootyhome