Take a fresh look at your lifestyle.

பவன் கல்யாண் படத்தில் ஜப்பான் நடிகர்!

103

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண், இப்போது ஆந்திர மாநில துணை முதலமைச்சராக இருக்கிறார். ஆனால் நடிப்பை விடவில்லை. பதவிக்கு வரும் முன்பு அவர் சில, படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.

அரசியல் பணி மற்றும் அரசுப் பணியில் தீவிரமாக இருந்ததால் அந்தப் படங்களின் வேலைகள் முடங்கி கிடந்தன.

அவற்றை முடித்துக்கொடுக்க நினைத்த பவன், மீண்டும் படப்பிடிப்பு அரங்குகளுக்கு வர ஆரம்பித்துள்ளார்.

‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துவிட்ட பவன் கல்யாண், தற்போது OG படத்தை விரைவாக முடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

மும்பை மாஃபியாவின் பின்னணியில் இதன் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. பவன் சக்திவாய்ந்த கேங்ஸ்டராக வருகிறார்.

சமீபத்தில் மீண்டும் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் படத்தில் பவன் கல்யாண் காட்சிகள் தவிர மற்ற அனைத்து நடிகர்களின் படப்பிடிப்பும் ஏற்கனவே முடிந்துவிட்டது. பவன் தொடர்பான காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

சுஜீத் இயக்கும் இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடிக்கிறார்.

அர்ஜுன் தாஸ், ஸ்ரியா ரெட்டி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஜப்பான் நடிகர் கசுகி கிடமுராவும் இணைந்துள்ளார். இவர், கில் பில், கோட்சில்லா: ஃபைனல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

– பாப்பாங்குளம் பாரதி.