Take a fresh look at your lifestyle.

விஜய் சம்பளம் 250 கோடி ரூபாய்!

தனுஷ் சம்பளம் ரூ. 50 கோடி!

‘இளைய தளபதி’ விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே பாக்கி உள்ளது.

‘ஜனநாயகன்’ படத்துக்கு விஜய்க்கு 250 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன் ஜி.எஸ்.டி தொகையும் இணையும்.

‘ஜனநாயகன்’ படத்துக்கு வாங்கிய சம்பளத்தை வைத்து பார்த்தால் இந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பது விஜய்தான்.

முன்னணி நடிகர்கள் சம்பளமாக ஒரு தொகையைப் பெற்றுக் கொள்வார்கள்.

தவிர வியாபாரத்தில் இருந்து பங்கு வாங்கி கொள்வார்கள். ஆனால், சம்பளமாக இவ்வளவு பெரிய தொகை பெற்றுள்ள முதல் நடிகர் விஜய்தான்.

நடிகர் தனுஷ் வாங்கும் சம்பளம் குறித்தும் புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழில் அறிமுகமாகி ஹாலிவுட் வரை சென்றுள்ள அவர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர்.

‘குபேரா’ வெற்றிக்கு பிறகு தனுஷுக்கு தெலுங்கு சினிமாவிலும் நல்ல சந்தை உருவாகியுள்ளது. இதனால் அவரது சம்பளம் உயர்ந்து விட்டது. இப்போது அவர் 50 கோடி கேட்பதாக தகவல்.

– பாப்பாங்குளம் பாரதி.