90-கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோவாக இருப்பவர் நடிகர் ஜாக்கி சான் இவர் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன.
அந்த வகையில் 2005-ம் ஆண்டு ஸ்டான்லி டோங் இயக்கத்தில் வெளிவந்த ‘தி மித்’ திரைப்படம். இந்தப் படம் சாகசப் படமாகவும் மற்றும் அதிரடி அக்ஷன் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இருந்தது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதையடுத்து, ‘குங்ஃபூ யோகா’ படம் தொடர்ச்சியாக ‘எ லெஜண்ட்’ (தி மித் – 2) படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் ஜாக்கி சானுடன், லே சாங், நா ஜா, ஆரிஃப் லீ, லி சென், பெங் சியோவ்ரான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதில் அகழ்வாராய்ச்சி நிபுணராகவும் மற்றும் ஏ.ஐ மூலம் இளம் வயது ஜாக்கிசானாகவும் என இரு மாறுபட்டக் கதாபாத்திரல் நடித்துள்ளார்.
இந்தப் படத்திலும் எப்போவும் போல் அதிரடி சண்டைகள், சாகசங்கள், கற்பனைக்கு எட்டாத காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்தப் படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.