Take a fresh look at your lifestyle.

விஜய்யின் கடைசிப் படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்?

68

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர்.

‘அசுரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அஜித்தின் ‘துணிவு’ படத்தில் நடித்தார். தற்போது வெற்றிமாறனின் ‘விடுதலை 2’-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.

‘வேட்டையன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார் மஞ்சு வாரியர்.

இதையடுத்து அவர் விஜய்யின் 69 வது படத்தில் நடிக்க இருப்பதாகச் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் இவர் அளித்த நேர்காணலில் ஹெச். வினோத்துடன் பணியாற்றிய அனுபவம் பற்றி மஞ்சு வாரியர் பேசியுள்ளார். அப்போது துணிவு படத்தில், வினோத் முழு சுதந்திரம் எனக்குக் கொடுத்தார்.

ஏதாவது காட்சியில் இன்னொரு டேக் கேட்டால் இந்தக் காட்சிக்கு இவ்வளவு போதும், நீங்கள் நன்றாக நடிப்பதற்கு நான் வேறு படம் தருகிறேன் என்று சொல்வார்” என மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

இதனால் வினோத் இயக்கும், விஜய்யின் 69 படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிகைகள் மமிதா பைஜு, சமந்தா ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது.

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதனிடையே நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் துவங்கியுள்ளதால், அவரது கடைசி படம் கமர்ஷியல் கலந்த அரசியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய்யின் கட்சி கொடி பயன்படுத்தப்படும் என்றும் அவரது எதிர்கால அரசியல் கொள்கைகள் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.