Take a fresh look at your lifestyle.

சர்வதேசத் திரைப்பட விழாவில் விருதுகளைக் குவித்த தமிழ்ப் படங்கள்!

29

செம்படம்பர் 27-ம் தேதி தென்னிந்திய சினிமாவில் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழா ஐக்கிய  அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபியில் பிரமாண்டாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

2022-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் பொன்னியின் செல்வன்.

இந்தப் படத்தில் நடித்த சியான் விக்ரம் சிறந்த நடிகர் என்ற விருதைப் பெற்றார். சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராய் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருது மணிரத்னத்துக்கு வழங்கப்பட்டது.

கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு சிறந்த திரைப்படத்துக்கான ஐபா விருது வழங்கப்பட்டது.

சிறந்த வில்லன் நடிகருக்கான விருது மார்க் ஆண்டனி படத்தில் நடித்த எஸ்.ஜே. சூர்யாவிற்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றார்.

இந்த ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருதை நடிகை சமந்தாவிற்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தெலுங்கில் தசரா படத்தில் நடித்த நானிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

பாலிவுட்டில் சிறந்த நடிகர் விருதை ஷாருக்கானுக்கும் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதை ராணி முகர்ஜிக்கு வழங்கப்பட்டது.