தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன் இவர் தற்போது தென்னிந்திய திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக மாறி வருகிறார். அந்த வகையில் பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த அயலான் திரைப்படம் விமர்சன ரீதியிலும் வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது 21-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘அமரன்’ திரைப்படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ளது. இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள்.
அண்மையில் இப்படத்தின் கதாநாயகியான சாய் பல்லவியின் அறிமுக விடியோ வெளியானது.
இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே’ பாடலை இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திற்கும் இந்தப் படத்திற்கு இவருடைய 700-வது பாடலாக இது உருவாகியுள்ளது.