Take a fresh look at your lifestyle.

‘கோட்’ படத்தின் 18 நாள் வசூல் – ரூ. 420 கோடி!

115

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் ‘கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, ‘மைக்’ மோகன் என ஏராளமான நட்சத்திரப் பட்டாளமே உள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியான ‘கோட்’ முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

படம் வெளியாகி 18 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இந்தப் படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

‘கோட்’ படம், 18 நாளில் உலகம் முழுவதும் 420 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் 215 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

தமிழ் நாட்டில் இந்த நிமிடம் வரை மூன்று சினிமாக்கள் மட்டுமே 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

அவை : பொன்னியின் செல்வன் -1, லியோ, மற்றும் கோட்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படம் கூட தமிழகத்தில் 200 கோடி வசூலித்ததில்லை.

விஜய்க்கு, அடுத்தடுத்து லியோ, கோட் என இரண்டு படங்கள் 200 கோடி ரூபாய் அள்ளி இருப்பதால், அவரது அடுத்த மற்றும் கடைசிப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் இந்தப் படத்துக்கு தற்காலிமாக ‘விஜய் – 69’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எச். வினோத் இயக்கும் படத்தை, கே.வி.என். நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். சட்டசபைத் தேர்தல் நெருக்கத்தில் அடுத்த ஆண்டு (2026) பொங்கலுக்கு படம் வெளியாகும் என தெரிகிறது.

– பாப்பாங்குளம் பாரதி