90s கிட்ஸ்களின் காதல் கதையான ‘செல்லக்குட்டி’ திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தொண்ணூறுகளில் பிறந்தவர்களின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை, நட்பு மற்றும் காதலை பிரதிபலிக்கும் வண்ணம், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் படத்தின் கதை அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஶ்ரீசித்ரா பௌர்ணமி ஃபிலிம் சார்பில் V.மணிபாய் தயாரித்துள்ள இந்தப் படத்தை சகாயநாதன் இயக்கியுள்ளார்.
சிற்பி பின்னணி இசை அமைக்க, T.S. முரளிதரன் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். ஓம்பிரகாஷ் சண்டைப்பயிற்சி அளிக்க, பாபி ஆண்டனி நடனப்பயிற்சி அளித்திருக்கிறார்.