சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக் பஸ்டர் படங்களில் ‘பாட்ஷா’வுக்கு தனியிடம் உண்டு. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 1995-ல் வெளிவந்த இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், ஆனந்தராஜ், சரண்ராஜ், தேவன், விஜயகுமார், யுவராணி உள்ளிட்ட பலர் நடிந்திருந்த இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தன பாடல்கள். படமும் மாபெரும் வெற்றிபெற்றன.
இந்த நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் படப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இசையமைப்பாளர் தேவா பகிர்ந்துள்ளார்.
பாட்ஷா படத்தின் அடையாளப் பாட்டான “நா.. ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்…” பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் தேவா. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்த், தேவாவுடன் துணை நடிகர்கள் என பலர் நிறைந்திருக்கிறார்கள் அந்தப் புகைப்படத்தில்.