தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில், தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் (Million Dollar Studios).
குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் 6 வது படைப்பாக புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.
தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களைத் தந்து, முன்னணியில் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் (VELS Film International) நிறுவனம் தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் நடிகர் தனுஷ் நடிப்பில், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் “D54” மற்றும் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் “மூக்குத்தி அம்மன் 2” படங்களைத் தயாரித்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து, அசோக் செல்வன் நடிக்கும் இந்த புதிய படத்தினை, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனமும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் கலக்கி வரும் நடிகர் அசோக் செல்வன் இப்படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கலக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார்.
இதன் படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் இன்று துவங்கி, ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக, அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இப்படத்தை இயக்குகிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் விக்ரமன் எடிட்டிங் பணிகளை கையாளுகிறார்.
இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் படக்குழு தெரிவித்துள்ளது.