Take a fresh look at your lifestyle.

சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடம்!

72

முழுமையான தொழில்நுட்பப்பணிகளை வழங்கும் மெய்நிகர் தயாரிப்புக் கூடமான uStream, சென்னை ARR ஃபிலிம் சிட்டியில் தன் புத்தெழுச்சியான பயணத்தைத் தொடங்குகிறது.

ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடி ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் uStream உருவாகிறது.

வியப்பூட்டும் LED திரை அமைப்புகள் கொண்ட இந்த ஸ்டூடியோவில், கலைஞர்கள் கணினி காட்சியமைப்புகளுடன் கற்பனை செய்ததை, நேரடியாக அந்தக் கணத்திலேயே கண் முன் காட்சிப்படுத்த முடிகிறது.

இந்த நவீன டிஜிட்டல் நுட்பத்தைக் கொண்டு உலகப்பதிவுகள், அக்கணத்தின் கற்பனைக் காட்சிப்படுத்துதல், செயல்திறன் பதிவு, பல மெய்நிகர் காட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் simulcam நுட்பம், கேமராவினுள்ளேயே செயல்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள் (ICVFX) கொண்டு உலகின் மெய்நிகர் தயாரிப்புத் துறையில் முன்னணியில் இருக்கிறது uStream.

திரைக்கலைஞர்களின் பல்வேறு படைப்பாற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட மெய்நிகர் இடம் தேடல் பகுதி, தொழில்நுட்பத்தேடல் பகுதி, VIP பார்வையிடல் பகுதி, மேம்பட்ட செயல்திறன் பதவிற்கான பகுதிகள், சிமுல்கேம் கட்டமைப்புகள்.

இயக்குநர்கள், நிர்வாகிகள், விருந்தினர்கள் படப்பிடிப்பின் போதே முன்வரிசையில் அமர்ந்து நேரடியாகக் காட்சிகளை காணும் சாத்தியம் மினியேச்சர் ஸ்கேனிங், மினியேச்சர் 3D பிரிண்டிங், காஸியன் ஸ்பிளாட்டிங் தொழில்நுட்பங்களையும் (Gaussian splatting) விரைவில் வழங்குதல்.

சென்னையின் அருகில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ARR ஃபிலிம் சிட்டி, உள்ளூர் மற்றும் சர்வதேசத் தயாரிப்புகளுக்கான சிறந்த சூழலை வழங்குகிறது.

uStream – ஸ்டூடியோவின் உயர்தொழில்நுட்ப மெய்நிகர் தயாரிப்பு மேடையைத் தவிர, ARR ஃபிலிம் சிட்டி, இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் அவர்களால் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட உலகத்தரத்திலான இசைப்பதிவு, தயாரிப்புக் கூடத்தையும் கொண்டிருக்கிறது.

பாரம்பரிய திரைப்படத் தயாரிப்பு, படப்பிடிப்பு அரங்க உருவாக்கத்திற்குப் பொருத்தமான இரண்டாவது மேடை மற்றும் பல அளவிலான தயாரிப்புக் குழுக்களுக்கான தனிப்பட்ட வசதிகளையும் கொண்டிருக்கிறது.

திரை இயக்குநர்கள் தங்கள் படைப்பாக்கத் திட்டங்களில் முழுமையான கவனம் செலுத்துவதற்கு வழிவகுக்கிறது இந்தக் கலை மையம்.

அதே நேரத்தில் சிறந்த தரமான வசதிகளை ஒரே இடத்தில் பயன்படுத்தும் வாய்ப்பையும் வழங்குகிறது.