படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடிய ‘யோலோ’ படக்குழு!

இயக்குநர் எஸ்.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாகவும் தேவிகா நாயகியாகவும் நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகி வரும் படம் ‘யோலோ’

எம்.ஆர் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் பூஜை, திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள கடந்த ஜூலையில் சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.சாம், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், திலீப் குமார், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா, விக்னேஷ், லக்‌ஷ்மி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தப்பட்டது. இந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளது. விரைவில் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தொடங்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment