பிரமாண்ட படங்களைப் பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்களுக்குப் பிரமாண்ட நடிகரை காண்பிக்க இருக்கும் படம் ‘சுமோ’. வரும் 25-ம் தேதி வெளியாகிறது.
சிவா, பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்துள்ளனர். ஹோசிமின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சதீஷ், விடிவி கணேஷ், யோகிபாபு, ஜப்பானைச் சேர்ந்த சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோ பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
டோக்கியோவில் இருந்து சென்னை வரும் ஒரு சுமோ வீரர், சிவாவைச் சந்திக்கிறார். இருவருக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது படம்.
இதில் நடிக்கும் ஜப்பான் வீரர் யோஷினோரி தஷிரி 170 கிலோ எடை கொண்ட மாமிச மலை. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து யோஷினோரி கூறியதாவது:
“நான் 170 கிலோ எடை கொண்டவன். இந்தியாவில் சில விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன். நான் நடிக்கும் முதல் சினிமா இது.
குழந்தைகளை மையப்படுத்தி அவர்களுக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிலும் தமிழ்நாட்டிலும் ‘ஷுட்டிங்’ நடைபெற்றது.
மாமல்லபுரத்தில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, அங்குள்ள வெண்ணெய் உருண்டை பாறையைப் பார்த்து வாய் பிளந்தேன்.
அதைத் தள்ள வேண்டும் என்று கொள்ளை ஆசை. பார்ப்போம் – இதுவரை எட்டு முறை இந்தியா வந்திருக்கிறேன்.
சென்னை எனக்கு ரொம்பவும் பிடித்து போயிற்று – கோவளத்தில் வசிக்க ஆசை’ எனச் சொல்லிய ‘மாமிச மலை’ குழந்தைப் போல குதூகலிக்கிறது.
– பாப்பாங்குளம் பாரதி.
#ஹோசிமின் #Hosimin #சுமோ #Sumo #சிவா #Siva #பிரியா_ஆனந்த் #Priya_anand #சதீஷ் #Sathish #விடிவி_கணேஷ் #Vtv_Ganesh #யோகிபாபு #Yogibabu #சுமோ_மல்யுத்த_வீரர் #Sumo_wrestling_player #யோஷினோரி_தஷிரோ #Yoshinori_Tashiro #ஐசரி_கணேஷ்