‘மே மாதம்’ தோல்வி; ‘காதலன்’ ஹிட்டானதன் பின்னணி!

‘மே மாதம்’ –  தல அஜித் குமார் ஆடிஷனில் நடித்துக் காண்பித்து ரிஜெக்ட்டான படம்.
.
என்னது!! அஜித் குமாரையே ரிஜெக்ட் பண்ணிட்டாங்களா அப்படின்னு நீங்க கேட்கலாம்…
 
ஆம். அஜித் குமாரும் நடித்துக் காண்பித்தார், வினீத்தும் நடித்துக் காண்பித்தார். அப்பொழுது அஜித்குமாருக்கு பதிலாக வினீத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.
.
அந்தப் படத்தில் குஷ்பு நடிப்பதாக இருந்து அதற்கு பதிலாக தான் சோனாலி குல்கர்னி – மணிரத்தினத்தின் ரெக்கமண்டேஷனில் வந்தார்.
.
90’s கிட்ஸ் சாகும் வரை மனதில் இருந்து அழியாத ஒரே படத்தை கொடுத்துவிட்டுச் சென்றவர்.
.
இந்தப் படத்தைப் பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன…
.
முதலில் சோனாலி குல்கர்னி – இன்னைக்கு மராட்டி சினிமால Highest paid artist இவங்கதான்… நேஷனல் அவார்டு-ல இருந்து பல அவார்டு வாங்கி இருக்காங்க.
.
மணிரத்தினமே இவங்கள ஒரு அவார்ட்ஸ் படத்துல பார்த்து தான் இயக்குனருக்கு ரெகமெண்ட் பண்ணினாராம்.
.
சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியாவைவிட பத்து மடங்கு குறும்பு. இவங்க மே மாதத்தில் பண்ணி இருப்பாங்க. பார்க்க லைட்டா ஜெனிலியா facecut இவங்களுக்கு இருக்கும்.
.
what a natural performer தெரியுமா… இட்டாலியன் படங்களில் நடித்த வெகு சொற்ப நடிகர்களில் இவரும் ஒருத்தர்.
 
இவரைத் தமிழ் சினிமா உபயோகப்படுத்தவில்லை என்று சொல்வதை விட, இவர் அதன் பிறகு பயங்கர பிஸியாகிவிட்டார் என்றே சொல்லலாம். ஏனென்றால் இவர் பல லாங்குவேஜ் படங்களில் நடித்தார்.
.
அடுத்து… இயக்குநர் பாலு. இவர் எம்ஜிஆர் காலத்து இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் T.N. balu வின் மகன்…
 
இயக்குநர் மணிரத்தினத்திடம் ‘நாயகன்’ மற்றும் ‘தளபதி’ படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்தார்… இவருக்கும் இது ஒரே படம்தான் அதன் பிறகு வேறு படம் இயக்கவில்லை.
.
இந்தப் படம் மேலும் பல பெரிய தலைகளின் முக்கியமான படம் – ஏ.ஆர்.ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம், கிரேஸி மோகன்.
 
ஏ.ஆர்.ரகுமான் – இன்றும் ரகுமானிடம் கேட்டீர்கள் என்றால் அவரின் பேவரைட் பாடல் “மார்கழிப் பூவே” பாட்டு தான்…
 
இந்தப் படத்தின் எல்லா பாட்டுமே.. காலத்தில் அழியாத பாடல்களாக வந்து விட்டன.
 
இயக்குநர் ஒரு பேட்டியில் சொல்லும் பொழுது… அப்பொழுது ஏ.ஆர்.ரகுமான் ரொம்ப பிசியாக இருந்த நேரம்..
 
ஒரு பக்கம் கிழக்கு சீமையிலே படத்துக்காக பாரதிராஜா போன்ற இயக்குநர்கள் இவரது ஆபீஸில் காத்துக்கொண்டிருந்த கொண்டிருந்த நேரம்… மே மாதம் படத்தின் இயக்குநர் நைசாக… ரகுமானிடம் பேசியே டியூன் வாங்கி விடுவாராம்.
.
ஏ.ஆர்.ரகுமான் இறங்கி வேலை செய்த படங்களில் இதுவும் ஒன்று…
 
இந்தப் படத்தில் ஹீரோ உபயோகிக்கும் ஒரு பழைய கார் ஓடும் சத்தத்தை எல்லாம் மியூசிக் ஆக மாற்றி இருப்பார்…
 
ஒரு காட்சி – ஹீரோவிடம் வீட்டு ஓனர்… சிகரெட் கேட்கும் காட்சி… அதில் இருமல் சத்தத்தை வைத்து ஒரு டியூன் போட்டு இருப்பார்… ஒரு படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக் ஹம்மிங் செய்யும்… அளவுக்கு இந்த படத்தின் BGM கூட மனதில் பதிந்துவிடும்…. 
.
அடுத்து பி.சி. ஸ்ரீராம்.. இந்த படம் அனைத்து காட்சிகளும் மிகவும் டார்க் மோடில் half shadow வாக… மிகவும் நேச்சுரலாக எடுத்திருப்பார்
.
தமிழ் சினிமாவில் டைம் டிராவல் பண்ணி 20 வருஷத்திற்கு பிறகு வரவேண்டிய படத்தை அப்பவே எடுத்திருப்பார்கள்… 
.
இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக.. நாடகத்தன்மை இல்லாமல் எதார்த்தமாக இருக்கும்… 
.
படத்தின் நாயகி ஒரு பெரிய பணக்கார தந்தையின்… தினசரி மிலிட்டரி வாழ்க்கையை பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
 
அவளுக்கு ஒரு சொட்டை தலை திக்குவாய் பணக்கார மாப்பிள்ளையை கட்டாய கல்யாணம் செய்ய அவர் அப்பா முயற்சிக்கும் பொழுது வீட்டை விட்டு ஓடி வந்து விடுவார் சென்னைக்கு…
.
சென்னையில் போட்டோகிராபராக… கொடுத்த வேலையை ஒழுங்காக செய்யாமல் ரூம் வாடகை கட்டாமல்… சோம்பேறி ஊதாரியாக சுற்றிக் கொண்டிருக்கும் வினித் மற்றும் அவன் கூட சுத்தும் கல்கத்தா என்ற சிறுவனிடம்.
 
கதாநாயகி சென்னை வரும்போது bag மாரி… அந்த பேக்கில் இருக்கும் பணத்தை எடுத்து ஹீரோவும் கல்கத்தாவும் ஜாலியாக செலவு பண்ண… Hero-வை தேடி வரும் ஹீரோயின்… தன் பணத்தைக் கேட்டு சண்டை போட்டு…
 
அந்தப் பணத்துக்காக ஹீரோ கூடவே சுத்தி… அது பிறகு காதலாக மாறும்… 90s madras travel vlog தான்.. இந்த மே மாதம்..
 
அந்த காலத்திலேயே மிகவும் நேர்த்தியான ஒரு ஸ்கிரீன் ப்ளே இந்த படத்துல பார்த்தேன்..
.
ஒரு பிரச்சனைக்கும் அதிலிருந்து முடிச்சு போட்டு இன்னொரு பிரச்சினை ஆரம்பிக்கிற அந்த விஷயம் இந்த படத்துல சூப்பரா இருக்கும்… படத்தோட காட்சிகளை ஸ்டேஜிங் பண்றது ரொம்ப நேச்சுரலா இருக்கும் இந்தப் படத்துல…
.
ரீசண்டா யூடியூப்ல அந்தப் படத்தைப் பார்த்து ரொம்ப என்ஜாய் பண்ணினேன்… கிளைமாக்ஸ் மட்டும்தான் கொஞ்சம் சுமாரா இருக்கும்.
.
சுவாரசியம் என்னன்னா இந்த படம் 9th sep-1994 ரிலீஸ் ஆகி பிளாப் ஆகுது… இதே கதையை கொஞ்சம் மாற்றி காதலன் அப்படின்ற படம் இதே வருடம் இதே மாதம் 17-sep-1994 ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் அடிக்குது…
 
காரணம், அதுல கமர்சியல் வேல்யூ அதிகமா இருக்கும்… ஜெயிச்ச ஸ்டார் காஸ்ட்… சங்கர் என்ற வெற்றி பட இயக்குனர்.. நிறைய கமர்சியல் சீன் வடிவேலு காமெடி.. எல்லாம் வச்சு இதே கதைய சொல்லி ஜெயிச்சிருப்பாங்க
.
மே மாதம் ரொம்ப நேச்சுரலா புது முகங்களை வைத்து… படத்துல காமெடிக்கு என்று தனி ட்ராக் இல்லாம… எல்லாருமே காமெடி பண்ணுவாங்க… இரண்டு படத்துக்கும் ஏ.ஆர்.ரகுமான் மியூசிக்… இரண்டு படத்திலும் பாடல்கள் செம ஹிட்.
.
ஆனால், மே மாதம் தோல்வி… காதலன் ஹிட்.
 
– நன்றி: முகநூல் பதிவு
Comments (0)
Add Comment