மதுரைக்காரனாக விஜய்காந்த் நினைவுகள்…!

இலக்கிய ஆர்வலர் அருணாசலம்

முதன்முதலாக விஜய்காந்த்தை ‘சாட்சி’ பட பிரிவியூ ஷோவில் பார்த்தேன். நாங்கள் அப்போது டைரக்டர் S.A சந்திரசேகரன் அவர்களின் கெஸ்ட்டாக போயிருந்தோம்.

கருமையான நெடிய உருவம். பளபளக்கும் சின்னக் கண்கள். ஷைனிங்கான தலைமுடி. காபடியன் ப்ரவுன் பெல்பாட்டம் பேண்ட். பெரிய கழுகு பெல்ட். பெரிய காலர்வச்ச லைட் ப்ளூ ரெடிமேட். ஷர்ட்.

என்னை S.A.C. அறிமுகம் செய்து வைத்தவுடன், நான் மதுரை என்றவுடன் கூடுதலாக பாசத்துடன் கட்டிக்கொண்டார்.

தானே டிபன் தட்டை எடுத்து எனது கைகளில் திணித்தார்.

அதன் பின் சென்னை வரும்போதெல்லாம் சில preview shows அவருடன் பார்த்துள்ளேன். நான் சின்னப் பையனாக இருந்தாலும் மிக மரியாதையாக பழகுவார்.

கடின உழைப்பால், பின்னர் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அவருடைய கல்யாண பத்திரிக்கை கிடைத்தும், மதுரை கூட்ட நெரிசலை எண்ணி நான் கலந்து கொள்ளவில்லை.

மதுரை அலங்கார் தியேட்டர் அருகில் இருந்த பாலன் டெய்லர்ஸ் அவர் நண்பர். அங்கு இரண்டுமுறை சந்தித்து உரையாடியுள்ளேன்.

நல்ல மனிதன். இன்று புகைப்படமாக.

நன்றி: பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment