அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் – துஷாரா விஜயன் ஜோடியாக நடித்துள்ள படம் – ‘வீர தீர சூரன், பாகம் – 2’. எஸ்.ஜே.சூர்யா, சித்திக் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வழக்கமாக ஒரு படத்தின் முதல் பாகம் வெளியானப் பிறகு இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகும்.
ஆனால் ‘வீர தீர சூரன்’ படத்தைப் பொறுத்த வரை, இதன் முதல் பாகம் இன்னும் தயாராகவே இல்லை. ஒரு புதிய முயற்சியாக, இரண்டாம் பாகத்தை முதலில் எடுத்து முடித்துள்ளார் அருண்குமார்.
இந்தப் படம் நேற்று (27.03.2025 வியாழக்கிழமை) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆவதாக இருந்தது. முன்பதிவும் நடைபெற்றது. ஆனால் ஓடிடி விவகாரம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
படத்துக்கு ‘பைனான்ஸ்’ செய்த ‘பி 4 யூ’ நிறுவனம், படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் தடையும் விதிக்கப்பட்டது. இதனால் வீர தூர சூரன் படத்தின் காலை, மற்றும் மதிய காட்சிகள் திரையிடப்படவில்லை. பிற்பகல் வாக்கில் பைனான்ஸ் நிறுவனத்துக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டது.
இதனால் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை டெல்லி உயர்நீதிமன்றம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து படம் ரிலீஸ் ஆனது. மாலைக் காட்சியும் இரவுக் காட்சியும் நடைபெற்றது.
படத்துக்கு ரசிகர்கள், மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சனங்களும் படத்தைக் கொண்டாடுகின்றன. இரண்டு காட்சிகள் ஓடினாலும், நேற்று வீர தீர சூரன் படம் மூன்றரை கோடி ரூபாய் வசூலித்துள்ளது. படத்தின் வசூல் இன்று மேலும் அதிகரிக்கும் என படத் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்க்கிறது.
பல ஆண்டுகளாக விக்ரம், தொடர்ச்சியாக தோல்விப் படங்களாகவே கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் ‘வீர தீர சூரன்’ ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைப் பெற்றுள்ளதால், மகிழ்ச்சியில் திளைத்துள்ளார் சீயான் விக்ரம்.
– பாப்பாங்குளம் பாரதி.