30 இயக்குநர்களை அறிமுகம் செய்த சூப்பர்குட் நிறுவனம்!

ஷங்கர் தயாரிப்பில் ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட வடிவேலு, கால்ஷீட் தராமல் இழுத்தடித்ததால், படங்களில் நடிக்க அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’ கார்டு போட்டது.

ஷங்கருக்கு 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்தினால் மட்டுமே புதிய படங்களில் நடிக்க முடியும் என உத்தரவிட்டது.
அபராதம் செலுத்தாததால் பல ஆண்டுகள் அவர் நடிக்காமல் இருந்தார்.

லைகா நிறுவனம் 10 கோடி ரூபாய் ஷங்கருக்கு அபராதம் கொடுத்து, வடிவேலுவை தங்களின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்க வைத்தது.

அந்தப் படம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரித்த ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதியின் தந்தையாக குணசித்திர வேடத்தில் வடிவேலு நடித்தார்.

ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். படம் பெரிய வெற்றி பெற்றது. ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு ஃபஹத் பாசில், வடிவேலு இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு ‘மாரீசன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

விக்ரமன், கே.எஸ். ரவிகுமார், எழில், லிங்குசாமி உள்ளிட்ட சுமார் 30 இயக்குநர்களை தமிழில் அறிமுகம் செய்த சூப்பர்குட் நிறுவனத்துக்கு இது 98 வது படமாகும்.

இந்தப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். இவர் ‘ஆறு மனமே’ எனும் படத்தையும், திலீப் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘வில்லாலி வீரன்’ படத்தையும் இயக்கியுள்ளார்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வடிவேலு ஜோடியாக சித்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு வடிவேலுவும், ஃபஹத் பாசிலும் இணைந்து நடிக்க உள்ளதால் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

-பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment